செவ்வொளி வீசும்
செய்யோனே உன்
செங்கதிர் தீண்டியென்
வெண்மைச் சிறகுகள்
வெந்து தான் மண்ணிலே
வீழ்ந்தனவே..
எந்தையும் தாயும்
மெய்வார்த்த இன்னுயிர்
வெண்ணிற சாம்பலும் கிளறி
புத்துயிர் படைத்து என்னை
சென்று வா என்றனுப்பியதே..
வானேறி மீண்டுமொரு
பயணத்தில் உன்னை நோக்கி நான்..
நீயே என் இறைவன்..
காத்தலும், அழித்தலும் உன்கரமதிலேயே
நிகழட்டும்..
No comments:
Post a Comment