திருமண சூத்திரம்


திருமணம் என்ற கலனில் (ஒரு பாத்திரம்) அடைக்கப்பட்ட இருவேறு வடிவங்கள் (உதாரணம் A ,B )  தான் ஆணும், பெண்ணும். இதில் வாழ்க்கை என்ற விசை (Force ) பல்வேறு சூழ்நிலைகளை உருவாக்கி அந்த பாத்திரத்தை சுழற்றிக் கொண்டே இருக்கிறது . அப்போது இந்த இரு வடிவங்களும் (A ,B ) ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து மோதிக் கொள்கிறது. இதனால் என்ன நடக்கும் என்பதை ஒரு சூத்திரம் (FORMULA ) மூலம்  பார்க்கலாம்.  

Formula 1

இந்த இரு வடிவங்களில் ஒன்று ( A ) கடினமானது ( HARDNESS ) மற்றொன்று ( B ) இலகுவானது (FLEXIBLE ) என்று வைத்துக்கொள்வோம். தொடர்ந்து ஏற்படும் மோதலால் கொஞ்சம் கொஞ்சமாக ( A ) HARDNESS ன் வடிவத்திலேயே ( B ) FLEXIBLE மாறி விடுகிறது. இதனால் தான் பல குடும்பங்களில் திருமணமான புதிதில் தம்பதிகளுக்கிடையே ஏற்படும் சண்டைகள் மெல்ல மெல்ல குறைந்து விடுகிறது. 

காரணம் அந்த தம்பதிகளில் நிச்சயம் யாராவது ஒரு இலகுவான (FLEXIBLE ) குணம் உடையவர்கள் இருப்பார்கள். 

சண்டை குறைந்து ஒற்றுமையாக வாழ்ந்தாலும் இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது அதாவது ( A ) HARDNESS ன் வடிவத்திலேயே ( B ) FLEXIBLE யும் மாறி விடுவதால் அவர்களின் ( C ) பிள்ளைகளும் (A ) HARDNESS- ன் வடிவத்திலேயே மாறிவிடுகிறார்கள். பிள்ளைகளில் ஏதாவது ஒன்று ( B ) FLEXIBLE  போன்று இருந்தாலும் இந்த ( A ) HARDNESS அவர்களை விரைவில் தன் வழிக்கு மாற்றிவிடும். சரி இதுல என்ன பிரச்சனை என்கிறீர்களா ? ( A ) HARDNESS நல்ல குணங்களை உடையதாக இருக்கும் பட்சத்தில் எல்லாம் சிறப்பாக இருக்கும் ஒருவேளை அது மோசமான குண நலன்களைக்  கொண்டு இருந்தால் பிரச்சனை தான்.

எனவே சூத்திரம்( FORMULA ) 

( A ) HARDNESS + ( B ) FLEXIBLE = C (HARDNESS ) - இதனால் தான் பல குடும்பங்களில் அப்பாவை போலோ அம்மாவை போலோ குணத்தில் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

Formula 2:

இது மிக முக்கியமான  FORMULA இதில் (A ) வடிவம் மற்றும் (B ) வடிவம் இரண்டுமே FLEXIBLE அதாவது ஆணும், பெண்ணும் தங்களுக்குள் ஒருவர் தவறுகளை அடுத்தவர் திருத்த முயற்சிக்கும் போது அந்த இருவருக்கும் FLEXIBILITY (இலகுதன்மை ) இருப்பதால் தங்கள் தவறுகளை தன் துணைக்காகத் திருத்திக்கொள்வார்கள். இதனால் தான் இது போன்ற குடும்பங்களில் பிரச்சனை என்று அதிகமாக வராமல் நல்ல முறையில் வாழ்வார்கள். 

இதனால் அவர்கள் பிள்ளைகள் அப்பா , அம்மாவின் POSITIVE (நல்ல குணங்களை) மட்டுமே பெறுகிறார்கள். இருவரின்  நல்ல குணங்களையும் பெற்று சிறந்த பிள்ளைகள் ஆகிறார்கள். எனவே இதற்கான FORMULA:

( A ) FLEXIBLE + (B ) FLEXIBLE =  ( C ) FLEXIBLE மற்றும் அப்பாவை போலோ அம்மாவை போலோ இல்லாமல்  ஒரு புதுமையான வடிவம் பெறுகிறார்கள். 

Formula 3:

இது ஒரு துர்அதிர்ஷ்டவசமான நிலை. ஆணும், பெண்ணும் (A , B ) இரண்டு வடிவங்களுமே HARDNESS தன்மை பெற்றிருக்கும் போது காலம் முழுவதும் அவர்கள் ஒத்துப்போவதற்கு சந்தர்ப்பங்கள் அமைவதில்லை. இதனால் திருமண முறிவு ஏற்ப்படுகிறது. திருமணம் செய்து விட்டோமே என்று இவர்கள் ஒருவருக்கொருவர் பிடிக்காமல் வாழும் போது இவர்களின் பிள்ளைகள் (C ) மிகவும் குழப்பமான சூழ்நிலையில் வளருகிறார்கள். 

( A ) HARDNESS + (B ) HARDNESS = (C ) HARDNESS மற்றும் மிகக் குழப்பமான மனநிலை  பெறுகிறார்கள்.


(பின்குறிப்பு: இது எந்த அளவிற்கு எல்லோர் வாழ்விலும் ஒத்துப்போகும் என்று தெரியாது. இது ஒரு சிந்தனையின் வெளிப்பாடு மட்டுமே)

No comments: