நிலவின் ஒளியில்
நிழல்களின் நிஜங்கள்
நடமாடும் நடுநிசியில்
நெடுஞ்சாலையைக்
கரம் பிடித்து ஊரை
விட்டு ஓடுகிறேன்..
ஆம்..இது கள்ளக் காதல் தான்..
கவலைகள் துரத்த
விரைகிறது எனது
நினைவுச் சக்கரங்கள்..
அரும்பு மீசைக் காதல் தொடங்கி..
குறும்பு செய்த நாட்கள் கடந்து..
விரும்பிப் பிடித்த கை வரை காலம் சுழன்றும்..
என்னைத் தேடுகிறேன் காணவில்லை..
அதோ அங்கே தூரத்தில்
மங்கிய ஒளியில் நாளைய
விடியலை எண்ணிக் கொண்டிருக்கிறார் ஒருவர்..
அண்ணே ஒரு டீ ..
கேள்விக் குறியாய் நின்றவர்..
அலட்சியமாய் சென்று அவருக்கும் ஒன்றாய்
இரு கோப்பைகளுடன் வருகிறார்..
ஆவி பறக்க வெறுப்பை
நான் உறிஞ்சுவதையே
உற்றுப் பார்க்கிறார்..
அவரது கோப்பை
ஆறுகிறது..
எங்க பயணம் தம்பி?
சில்லரையின் சிணுங்கலாய்
ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு
நகர்கிறேன்..
நீண்ட கருங்கூந்தலுடன் காதலி
காத்திருக்கிறாள்..
மீண்டும் பயணம் துவங்குகிறது..
என்னைத் தேட வேண்டும்..
நிழல்களின் நிஜங்கள்
நடமாடும் நடுநிசியில்
நெடுஞ்சாலையைக்
கரம் பிடித்து ஊரை
விட்டு ஓடுகிறேன்..
ஆம்..இது கள்ளக் காதல் தான்..
கவலைகள் துரத்த
விரைகிறது எனது
நினைவுச் சக்கரங்கள்..
அரும்பு மீசைக் காதல் தொடங்கி..
குறும்பு செய்த நாட்கள் கடந்து..
விரும்பிப் பிடித்த கை வரை காலம் சுழன்றும்..
என்னைத் தேடுகிறேன் காணவில்லை..
அதோ அங்கே தூரத்தில்
மங்கிய ஒளியில் நாளைய
விடியலை எண்ணிக் கொண்டிருக்கிறார் ஒருவர்..
அண்ணே ஒரு டீ ..
கேள்விக் குறியாய் நின்றவர்..
அலட்சியமாய் சென்று அவருக்கும் ஒன்றாய்
இரு கோப்பைகளுடன் வருகிறார்..
ஆவி பறக்க வெறுப்பை
நான் உறிஞ்சுவதையே
உற்றுப் பார்க்கிறார்..
அவரது கோப்பை
ஆறுகிறது..
எங்க பயணம் தம்பி?
சில்லரையின் சிணுங்கலாய்
ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு
நகர்கிறேன்..
நீண்ட கருங்கூந்தலுடன் காதலி
காத்திருக்கிறாள்..
மீண்டும் பயணம் துவங்குகிறது..
என்னைத் தேட வேண்டும்..

No comments:
Post a Comment