பாறைகளின் மேல் வீழும் பால்நதி


பாறைகளின் மேல் வீழும் பால்நதியே
உன் பாதையில் கிடக்கும் பாறைத்துண்டு நான்..
என் கூர்முனைகளைத் தீட்டி,
என் முரட்டுப் பக்கங்களை மாற்றி,
மென்மை தாங்கிய கூழாங்கல்லாய்
உன் நதிவெளியின் கரையினிலே
வீசிவிட்டு நகர்கிறாய்..

 
இதோ மழலை ஒன்று
தன் பிஞ்சு கைக்குள்
என்னை அடக்கிக் கொள்கிறது..
அதன் உள்ளங்கையின் வெப்பத்தில்
நான் என்னை மறந்து உறங்குகிறேன்..

No comments: