ஞானமென்ற முத்தெடுக்க
முக்குளித்தான் ஆழ்மனதில்..
தரை தொட்டும் கூட
முத்தில்லை அங்கே..
வெற்றிடம் பார்த்து வெதும்பியவன்
அங்கேயே அத்தனையும் விட்டொழித்து
காலத்தின் கைப்பிடித்து நடந்தான்
ஞானி அவன்..
About Unknown
Phoenixdassan - Malaysian Lyricist, Poet, Journalist
No comments:
Post a Comment