தமிழே.. தமிழே..


தமிழே.. தமிழே..செந்தமிழே..
தமிழே.. உன்னாலே..
உலகை கைக்குள் கொண்டோமே..

அறிவியல் ஆயிரம் வந்தாலும்
அகிலமும் புதுமை கொண்டாலும்
அதனுள் தமிழின் ஆளுமையை
அகமும் மகிழ கண்டோமே..

கன்னித் தமிழே.. கணிப்பொறியில்
கலந்திட கடலும் கடந்தாயே..
ஓலைச் சுவடி பொன்மொழிகள்
ஒளிரும் சுவற்றில் உருமாறினவே..

கைக்குள் அடங்கும் கருவிகளில் 
சொல்லிட செல்லினம் துணையிருக்க..
சுடர்மிகும் தமிழில் எழுதியபடி 
சுடச் சுட செய்திகள் பகிர்ந்தோமே..

அரச கால சரித்திரங்கள்
சித்தர்கள் தந்த மருத்துவங்கள்
பண்டை தமிழர் வாழ்வியலும்
மின்னூல் ஆனதே நம் பெருமை..

புது கிரகம் ஒன்றில் மனிதன்
குடிபுகுந்தாலும் அங்கு..
விதையென வீழும் தமிழ்..
விருட்சகமாக வளரும் தமிழ்..

தமிழே..  தமிழே..
செந்தமிழே..
தமிழே.. உன்னாலே..
உலகை கைக்குள் கொண்டோமே..








No comments: