கலைஞன்...
தன் சொத்துக்களை விற்றேனும்
கையிருப்பு வித்தைகளை
பார் மகிழ படைத்துவிட்டு
கண்கள் ததும்பும் கனவுகளுடன்
கைதட்டல்களுக்குக் காத்திருப்பவன்...
கனவுகளை எல்லாம் காட்சிகளாக்கும்
வலிகளை எல்லாம் வார்த்தைகளாக்கும்
உணர்வுகளை நெஞ்சில் உரமாக்கும்
வரம் பெற்ற கற்பனைவாதி...
ஆணெனென்ன, பெண்ணென்ன
பேதமில்லை கலைஞனுக்கு..
நெஞ்சில் சிறு கனம் வந்தாலும்
அக்கணமே கன்னம் மூழ்க
கண்ணீரால் கதை எழுதுபவன்...
வென்றவனுக்கு சில காலம்
அரிதாரம் பூச்சு நிற்காது...
முகத்தில் பொலிவு வற்றாது...
காசு வைக்க இடம் பற்றாது...
தோற்றவனுக்கு சில காலம்
அவமானப் பேச்சு ஓயாது...
எதிலும் மனம் ஓடாது...
இருக்கும் இடமே தெரியாது...
எல்லாம் சில காலம் தான்....
எவன் எப்போது வெல்வான்..
எவன் எப்போது தோற்பான் என
வென்றவனுக்கும் சூத்திரம் தெரியாத...
தோற்றவனுக்கும் காரணம் புரியாத....
புதிரெனவே இருப்பது கலையும்,
கலைஞனின் வாழ்வும் தான்...
தன் சொத்துக்களை விற்றேனும்
கையிருப்பு வித்தைகளை
பார் மகிழ படைத்துவிட்டு
கண்கள் ததும்பும் கனவுகளுடன்
கைதட்டல்களுக்குக் காத்திருப்பவன்...
கனவுகளை எல்லாம் காட்சிகளாக்கும்
வலிகளை எல்லாம் வார்த்தைகளாக்கும்
உணர்வுகளை நெஞ்சில் உரமாக்கும்
வரம் பெற்ற கற்பனைவாதி...
ஆணெனென்ன, பெண்ணென்ன
பேதமில்லை கலைஞனுக்கு..
நெஞ்சில் சிறு கனம் வந்தாலும்
அக்கணமே கன்னம் மூழ்க
கண்ணீரால் கதை எழுதுபவன்...
வென்றவனுக்கு சில காலம்
அரிதாரம் பூச்சு நிற்காது...
முகத்தில் பொலிவு வற்றாது...
காசு வைக்க இடம் பற்றாது...
தோற்றவனுக்கு சில காலம்
அவமானப் பேச்சு ஓயாது...
எதிலும் மனம் ஓடாது...
இருக்கும் இடமே தெரியாது...
எல்லாம் சில காலம் தான்....
எவன் எப்போது வெல்வான்..
எவன் எப்போது தோற்பான் என
வென்றவனுக்கும் சூத்திரம் தெரியாத...
தோற்றவனுக்கும் காரணம் புரியாத....
புதிரெனவே இருப்பது கலையும்,
கலைஞனின் வாழ்வும் தான்...

No comments:
Post a Comment