ஆசிரியர்

Image may contain: indoor 
விண்மீன் கூட்டத்தின் நடுவே
வேள்வி செய்யும் எங்கள் வெண்ணிலவே..

கண்ணைத் திறக்கின்ற கனவே
கற்றுத் தரும் எங்கள் கதிரனவே..

கரும்பலகை எழுத்தாய்
வெண்முத்துக்கள் இருக்குது வகுப்பினிலே..

கனவுகளை விதைத்தாய்
வெள்ளைக் காகிதம் கொண்டு மனதினிலே..

தாய் ஒரு சேயினைத் தந்தாள்
அந்த சேய்க்கும் தாய் மொழி தந்தவர் நீ..

ஆயிரம் மழலைகள் முன்னால்
அறிவினை வழங்கும் ஆதவன் நீ..

No comments: