கடவுச்சொல்லா?
இது கடவுளின் சொல்லா?
ஒரு தலைவிதியை மாற்றுதே..
திறவும்கோலா?
இது திறந்திடும் ஏடா?
உன் மறுமுகத்தைக் காட்டுதே..
விரல் நுனியில் தலை நசுக்க
திறந்திடுதே உன் ஜாதகம்
தொடு திரையில் முகம் சிரிக்க
நகர்ந்திடுதே உன் நாடகம்..
திறன்பேசி திசைகாட்டி
உன் முகவரியைச் சொல்லும்
முகநூலில் முதல் பக்கம்
உன் அகமொழியைச் சொல்லும்..
உன் வாழ்க்கை என் உள்ளங்கையில்
ஊசலாடுது..
நான் நினைத்தால் நொடிப் பொழுதில்
மாற்றிக் காட்டுவேன்..
நீ தொலைத்தது வெறும் தொழில்நுட்பம் அல்ல
உன் நினைவின் வடிவம்..
செயலி.. குறுஞ்செயலி.. உன் செயல்திறனைக் காட்டிடு..
No comments:
Post a Comment