இசை: சாந்தன்
பாடியவர்: விமல்
வரிகள்: ஃபீனிக்ஸ்தாசன்
பொன்மஞ்சள் ஞாபகங்கள்
பனித்துளிகள் வீழும் நினைவுகள்
என் நெஞ்சம் வந்து வந்து என்னைக் கொல்லுதே...
பனித்துளிகள் வீழும் நினைவுகள்
என் நெஞ்சம் வந்து வந்து என்னைக் கொல்லுதே...
உன் கொஞ்சல் ஓவியங்கள்
கருவிழி வழி புனையும் கனவுகள்..
என் மஞ்சம் வந்து நின்று என்னைக் கொல்லுதே...
கருவிழி வழி புனையும் கனவுகள்..
என் மஞ்சம் வந்து நின்று என்னைக் கொல்லுதே...
நடு இரவில் மழையினிலே...
அடி... மழையினிலே ஒரு குடையினில் நடந்த..
அடி நெஞ்சின் நினைவுகளை என்ன செய்வது?
அடி... மழையினிலே ஒரு குடையினில் நடந்த..
அடி நெஞ்சின் நினைவுகளை என்ன செய்வது?
நதி வெளியின் கரையினிலே..
நதிக் கரையினிலே ஒரு கதையினை வடித்த
வெண்ணிலா நாட்கள் வெள்ளைப் பூக்கள்
மறுமுறை பூக்குமோ?
நதிக் கரையினிலே ஒரு கதையினை வடித்த
வெண்ணிலா நாட்கள் வெள்ளைப் பூக்கள்
மறுமுறை பூக்குமோ?
பொன்மஞ்சள் ஞாபகங்கள்
பனித்துளிகள் வீழும் நினைவுகள்
என் நெஞ்சம் வந்து வந்து என்னைக் கொல்லுதே...
உன் கொஞ்சல் ஓவியங்கள்
கருவிழி வழி புனையும் கனவுகள்..
என் மஞ்சம் வந்து நின்று என்னை கொல்லுதே...
பனித்துளிகள் வீழும் நினைவுகள்
என் நெஞ்சம் வந்து வந்து என்னைக் கொல்லுதே...
உன் கொஞ்சல் ஓவியங்கள்
கருவிழி வழி புனையும் கனவுகள்..
என் மஞ்சம் வந்து நின்று என்னை கொல்லுதே...
இதழோர சிரிப்பினிலே
சலவை முத்துக்கள் பதித்து வைத்து..
அடை காக்கும் பறவை போல் நீ
ஆடை கூட்டுக்குள் வர வைப்பாய்...
சலவை முத்துக்கள் பதித்து வைத்து..
அடை காக்கும் பறவை போல் நீ
ஆடை கூட்டுக்குள் வர வைப்பாய்...
மந்தார மேகமே...
மறையாதே வானம் விட்டு
பொன்மின்னல் தேடுதே மாயங்கள் செய்கிறாய்...
தொலை தூரம் போனதே
தயக்கங்கள் மனதை விட்டு
மறையாதே வானம் விட்டு
பொன்மின்னல் தேடுதே மாயங்கள் செய்கிறாய்...
தொலை தூரம் போனதே
தயக்கங்கள் மனதை விட்டு
என் நெஞ்சில்
மெல்ல மெல்ல
கொல்ல கொல்ல
சோகத் தீயும் சுட்டு எரிந்தே ...
வருத்திடும்..
உந்தன் சுடர் மிகு ஒளிமுகம்
ஒரு முறை காண...
மெல்ல மெல்ல
கொல்ல கொல்ல
சோகத் தீயும் சுட்டு எரிந்தே ...
வருத்திடும்..
உந்தன் சுடர் மிகு ஒளிமுகம்
ஒரு முறை காண...
No comments:
Post a Comment