கனவுகள் - பாடல் வரிகள்


பாடல் தயாரிப்பு: ஜோக்காஸ் க்ரூ
இசை: சுந்தரா
பாடியவர்கள்: ஷிரின் பாலன், சுந்தரா, சத்யா, ஆனந்த், காளி.
மெல்லிசை வரிகள்: ஃபீனிக்ஸ்தாசன்
சொல்லிசை வரிகள்: ஜோக்காஸ் க்ரூ






கனவுகள் யாவும் கலைந்தது உன்னாலே
நெஞ்சை காயம் செய்தாய்....
வலியுடன் நானும் அலைகிறேன் தன்னாலே...
காதலா ...

இரவுகள் யாவும் கரையுது உன்னாலே...
தனிமை ஏக்கம் கொல்ல...
நிலவினில் நானும் நடக்கிறேன் தன்னாலே..
காதலா...

இமைகள் ஓரமாய்.. தேங்கிடும் ...
கண்ணீர் தந்தாயே...
இலையுதிர் காலமாய்... காற்றிலே...
சருகாய் ஆனேனே....

சிறகுகள் தந்த காதல் தான்...
சிறையினை தந்தால் நியாயமா?
சுகங்களும் தந்த நாட்கள் தான்
மறந்திடுமா?

இருதயம் நின்றே போனாலும்
இருவிழி உன்னை தேடாதா?
நினைவினில் நின்ற காதல் தான்
மறைந்திடுமா?

உயிர் வலி கொடுக்கிறாய்...
இதயத்தை வதைக்கிறாய்....
சுவாசமாக, நேசமாக மாறிபோகிறாய்..
ஆசையாக பேசி பேசி மோசம் செய்கிறாய்...

அழகிய வானமே ...
அனல் காற்றை ஏன் வீசினாய்...
மழை தரும் மேகமே...
கடும் பாறையாய் மாறினாய்....


தனிமையில் பெண்ணே வாடாதே..
சுமைகளை நெஞ்சில் போடாதே..
இளமையும் போனால் வாராதே..
தொலைத்துவிட்டால்..

உலகமே அன்பால் ஆனதே
அதை நீ தேடி ஓடாதே..
உண்மையில் அன்பு என்றாலே
கொடுப்பது தான்.. 

No comments: