விடியல் கொஞ்சம் தயங்கி
வாசல் வந்து நிற்கும்
அவள் உறங்கும் விழிகள் கண்டு
வாசல் வந்து நிற்கும்
அவள் உறங்கும் விழிகள் கண்டு
நேசப் பார்வை பார்க்கும்
கடிகாரம் ஒன்றே அறியும்
அவள் உறங்கச் சென்ற நேரம்
உடை ஈரம் உலரும் முன்னே
அவளின் உலகம் மலர்ந்திடுமே..
தேநீரில் தொடங்கும்
அவள் தினசரி பயணம்
தேனீக்கள் போலொரு
வேட்கை குணம் -அவள்
அள்ளியிட்ட சர்க்கரையை விட
சூடாற்றி தரும் அக்கறை இனிக்கும்
ஊணில் இட்ட வாசம் தாண்டி
கண்ணில் காட்டும் நேசம் மணக்கும்
விக்கல் சத்தம் அடுக்களை எட்டும்
தண்ணீரோடு அவள் கை என் தலை தட்டும்
புகை பட்டு அவள் விழிகள் சுரக்கும்
வீழும் துளிகள் கூட நேரம் பார்க்கும்
விடைகொடுக்க வாசல் தூணில் சாய்ந்து நிற்ப்பாள்
கடிகாரம் ஒன்றே அறியும்
அவள் உறங்கச் சென்ற நேரம்
உடை ஈரம் உலரும் முன்னே
அவளின் உலகம் மலர்ந்திடுமே..
தேநீரில் தொடங்கும்
அவள் தினசரி பயணம்
தேனீக்கள் போலொரு
வேட்கை குணம் -அவள்
அள்ளியிட்ட சர்க்கரையை விட
சூடாற்றி தரும் அக்கறை இனிக்கும்
ஊணில் இட்ட வாசம் தாண்டி
கண்ணில் காட்டும் நேசம் மணக்கும்
விக்கல் சத்தம் அடுக்களை எட்டும்
தண்ணீரோடு அவள் கை என் தலை தட்டும்
புகை பட்டு அவள் விழிகள் சுரக்கும்
வீழும் துளிகள் கூட நேரம் பார்க்கும்
விடைகொடுக்க வாசல் தூணில் சாய்ந்து நிற்ப்பாள்
சில நேரம் தூணை விட மெலிந்திருப்பாள்
அவளின் கதிரவ கைகள் சொல்லும் என்னை போய்வர
வெண்ணிலா விழிகள் ஏங்கும் நான் வீடு வர...
அவள் முகம் சுருங்கலாம்
ஒருநாளும் சுழிக்காது
கோலம் கொஞ்சம் குறுகலாம்
கோணல் என்றும் ஆகாது
அகமும் கொஞ்சம் சோரலாம்
அழுக்கு என்றும் ஏறாது
நெற்றியில் நெஞ்சில் இட்டவனையும்
கண்களில் பெற்ற பிள்ளைகளையும்
நினைவுகளில் உறவுகளையும்
மூச்சோடு கனவுகளையும்
சுமக்கிறாள் என்றும் உயிருள்ளவரை
அவள் மடி ஒரு மந்திர படுக்கை
தலை வைத்து படுத்தால் போதும்
மயிலிறகு விரல்களால் உச்சந்தலை கோதி
துன்பங்களை தூர எறிந்து விடுபவள்
வெண்ணிலா விழிகள் ஏங்கும் நான் வீடு வர...
அவள் முகம் சுருங்கலாம்
ஒருநாளும் சுழிக்காது
கோலம் கொஞ்சம் குறுகலாம்
கோணல் என்றும் ஆகாது
அகமும் கொஞ்சம் சோரலாம்
அழுக்கு என்றும் ஏறாது
நெற்றியில் நெஞ்சில் இட்டவனையும்
கண்களில் பெற்ற பிள்ளைகளையும்
நினைவுகளில் உறவுகளையும்
மூச்சோடு கனவுகளையும்
சுமக்கிறாள் என்றும் உயிருள்ளவரை
அவள் மடி ஒரு மந்திர படுக்கை
தலை வைத்து படுத்தால் போதும்
மயிலிறகு விரல்களால் உச்சந்தலை கோதி
துன்பங்களை தூர எறிந்து விடுபவள்
தான் இல்லாள் ..
No comments:
Post a Comment