அரும்பி வரும் அருந்ததியாய்
அழகு மகள் பிறந்திடவே
ஆகாயம் திறந்து வைப்பேன்
விண்மீன்களாய் துணைக்கு நிற்பேன்...
முதல் குரல் கேட்கும் வரை
மூச்சு விட மறந்திருப்பேன்
முத்து மகள் கண் திறக்க
முப்பொழுதும் காத்திருப்பேன்....
மயிலிறகாய் பொத்தி வைப்பேன்
மீசைக் குத்தா முத்தம் வைப்பேன்
எட்டு வைத்து அவள் நடக்க எந்தன்
மார்பை நட்டு வைப்பேன்....
தொப்புள் கொடி பந்தம் இல்லை
கருவறை சொந்தமில்லை
உயிரென்று ஒன்று உள்ளவரை
என்னை பெற்றவளாய் பார்ப்பேன்...
No comments:
Post a Comment