மாதம் பத்து
மடி கனத்து
உரு பெருத்து
வலி பொறுத்து
வெளிக்கொணர்ந்த
ஒரு காவியம்..
என்னில் உள்ளன யாவும்
நீ வடித்தது
கண்கள் தளும்பும்
கனவுகள் யாவும்
நீ அளித்தது
உயிர் வலியால் கதறி
உதிரமெல்லாம் சிதறி
ஆசை மட்டுமே ஆதாரமாய்
சேதாரம் எல்லாம் உனதாய்க் கொண்டு
மடி கனத்து
உரு பெருத்து
வலி பொறுத்து
வெளிக்கொணர்ந்த
ஒரு காவியம்..
என்னில் உள்ளன யாவும்
நீ வடித்தது
கண்கள் தளும்பும்
கனவுகள் யாவும்
நீ அளித்தது
உயிர் வலியால் கதறி
உதிரமெல்லாம் சிதறி
ஆசை மட்டுமே ஆதாரமாய்
சேதாரம் எல்லாம் உனதாய்க் கொண்டு
என்னைப்பெற்றெடுக்க நீ செய்த
சாகசத்தில் இன்றளவும் ஒரு துளியும்
சாகசத்தில் இன்றளவும் ஒரு துளியும்
நான் உனக்கு செய்திலேன்
கண்மூடிக் கிடந்து விட்டேன்
இல்லையேல்
கருவறையில் உனக்கு ஓர்
கவிதை எழுதியிருப்பேன்
கண்மூடிக் கிடந்து விட்டேன்
இல்லையேல்
கருவறையில் உனக்கு ஓர்
கவிதை எழுதியிருப்பேன்
அம்மா
உன் இதயம் மிக அழகானது
உன்னை விட நன்கு
அறிவேன் நான்...
இருட்டறையில் பத்து
மாதங்கள் அதன்
சத்தம் கேட்டு தான்
நான் வளர்ந்தேன்..
உன் இதயம் மிக அழகானது
உன்னை விட நன்கு
அறிவேன் நான்...
இருட்டறையில் பத்து
மாதங்கள் அதன்
சத்தம் கேட்டு தான்
நான் வளர்ந்தேன்..
மரிக்கும் நொடியில்
வரம் ஒன்று கிடைத்தால்
போதும், பிறந்த கருவறையிலேயே
என்னை புதைக்கவேண்டும் என்பேன்
மரணம் கூட மகிழ்ச்சி தான் மீண்டும்
உன் கருவறை சேர்வதால்.
வரம் ஒன்று கிடைத்தால்
போதும், பிறந்த கருவறையிலேயே
என்னை புதைக்கவேண்டும் என்பேன்
மரணம் கூட மகிழ்ச்சி தான் மீண்டும்
உன் கருவறை சேர்வதால்.
.
No comments:
Post a Comment