காலனின் நாளேடு



விபத்தில் இறந்த நண்பனின் மரணம்..
பல நாட்களாய் நோய்வாய்பட்டுக் கிடந்த  
தோழியின் மரணம்...
அடுத்த தெருவில் பாட்டியின் மரணம்...
சமையல் அறையில் கரப்பான்பூச்சியின் மரணம்...
காலில் மிதிபடும் எறும்பின் மரணம் ...
நாளிதழ்களில் எங்கோ நடக்கும்  
பல மரணங்கள் என தினம் மரணங்கள்
நம் அன்றாட வாழ்க்கையோடு  
சேர்ந்துநகர்ந்து கொண்டு தான் இருக்கிறது
அது நம்முடைய நாள் ஆகும் வரை...

No comments: