கடலென மக்களோடு
கடற்கரை நோக்கிப் பயணப்பட்டது
அந்தக் காலை ரயில்
கால் இல்லாத மனிதர் ஒருவர் தன்
கட்டைக்கால் வைக்க இடம் தேடிக் காத்திருக்க
ஒருக்காலும் நடக்காது என்பது போல் அமர்ந்து இருந்தனர்
கால் இல்லாத மனிதர் ஒருவர் தன்
கட்டைக்கால் வைக்க இடம் தேடிக் காத்திருக்க
ஒருக்காலும் நடக்காது என்பது போல் அமர்ந்து இருந்தனர்
கருணையற்ற கணவான்கள் அங்கே
கல்லூரி கலைமாமணிகள் சிலரின்
கானாக்களிலோ காமலீலவிநோதங்கள்...
“கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான்” ஏழை கண்ணீர்
“கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான்” ஏழை கண்ணீர்
துடைக்க கண்ணன் வந்தான் எனப் பாடிக்கொண்டே
கண்தெரியாத மனிதர் ஒருவர் அங்கே
கண்தெரியாத மனிதர் ஒருவர் அங்கே
கண்ணீருடன் கண்ணனைத் தேடுகிறார்....
கூத்தாடி ஒருவன் அங்கே குட்டிக்கரணமிட
கூத்தாடி ஒருவன் அங்கே குட்டிக்கரணமிட
காசு கேட்டுக் கை ஏந்தினால் அவனது
குட்டி தேவதை
பையில் இருந்து உணவை கையில் எடுபதற்குள்
பிடுங்கிச்சென்றான் அவளது அண்ணன்
குட்டி தேவதையின் பார்வையோ குழந்தைக்கு பாலூட்டும் தாயிடம்
காசு கொடுத்த என்னை அவள்
கண்கள் கனிவோடு நோக்கின
புரிந்தது அவளின் பார்வையின் அர்த்தங்கள் அன்று
தெரிந்தது பசியின் கொடூரம் என்னவென்று
என்று மாறுமோ இந்த நிலை ?
No comments:
Post a Comment