இருள் மோகத்தில் காமத்தின் மெழுகுவர்த்தி கொளுத்த
உற்ற துணையாய் ஒற்றை தீக்குச்சி தேடாமல்
பற்ற வைக்க கற்றைத் தீபந்தங்கள் நாடி
நோய் பரவி, மெய் உருகி, வாழ்வும் கருகி
மரிக்கின்ற மனிதனின் காதோரம்
மரணம் சொல்லும் கடைசிக் கவிதை "ஒழுக்கம்"
மாலை தொடங்கி மதுவில் மிதந்து
புலரி வரை புகையுடன் புழங்கி
கல்லீரல் கனத்து, நுரையீரல் கருத்து, உயி ர் சிறுத்து
இவ்வுலகை பிரியும் மனிதனின்
காதோரம் மரணம் சொல்லும் கடைசிக் கவிதை " ஒழுக்கம்"
காட்டாறு போல் வாழ்வில் கரைபுரண்டோடி
நெறிகெட்டு பல கரை தொட்டு
கழிவோடு கலந்து காலனின்
காலடியில் வீழ்ந்து மீண்டவரின்
கண்ணெதிரே மரணம் விதைக்கும் ஒற்றைக் கவிதை
"ஒழுக்கமே விழுப்பம்"
No comments:
Post a Comment