மதயானையும்.. கடுங்காவல் தண்டனையும்..

நான்கு வருடங்களாய் ஒரே இடத்தில்
கட்டபட்டுக் கிடக்கிறது அந்த யானை
மதம் பிடித்துவிட்டதாம் !

ஒரு திருவிழாவில் வளர்த்த பாகனை
பந்தாடிவிட்டதெனக் குற்றச்சாட்டு...

மிருகமாய் பிறந்து மனிதனால்
வளர்க்கப்பட்டு கோயில்களில்
பிச்சையெடுக்க வைக்கப்பட்ட
அந்த யானை..

அந்த நாளில்
தான் மனிதன் என்பதை
மறந்து தன்னிடம் மிருகமாய்
நடந்து கொண்ட பாகனை
தன்னிலை மறந்து
மிருக குணத்தைக் காட்டியதற்காக
வாங்கியதோ இந்த கடுங்காவல் தண்டனை ?

No comments: