உயிர்

உன் உடல் என்னும் வீட்டில் உயிரை அடைத்து 
மரணம் என்ற கதவு கொண்டு பூட்டிவைத்திருக்கிறது 
இயற்கை...

நீயாக பயம் என்ற சாவியை செய்து கொண்டு 
அடிக்கடி உயிர் இருக்கிறதா? இல்லையா என்று 
திறத்து பார்துக்கொண்டிருக்காதே மானிடா...

இயற்கை தானாய் ஒருநாள் திறக்கத்தான் போகிறது 
அதுவரை உன் வீட்டை பத்திரமாக பார்த்துக்கொள் 
அதனுள் அழகிய கோயில் கட்டு, பிறருக்கு பயனுள்ளதாக்கு....
ஒருநாள் தானாய் திறக்கும் போது சுதந்திர பறவையாய்
பறந்து போ.. பீனிக்ஸ் பறவையாய் மறுஜென்மம் எடுத்து
மீண்டு வா..



No comments: