சந்தோஷச் சிறகுகள்

சிறகே! எந்தன் இதயம் சேர்ந்தாய்!
சருகாய் வாழ்ந்தேன், வண்ணம் தந்தாய்!
எண்ணம் எல்லாம் உன்னை வைத்தாய்! 
அன்பே நீ! அடைமழையாய்
பொழிந்து விட்டாய்..
என் அனல் சுமைகள் 
அணைத்து விட்டாய்!

மழை நனைந்தும் காய்ச்சல் 
வராத பூமிக்கு சந்தோஷம், 
கார்மேகம் துரத்தி ஓடும்
காற்றுக்கும் சந்தோஷம்,
மண் வீழும் மழை துளிக்கு
மரம் ஒன்றில் குடியேறுவதில்
சந்தோஷம்,
உதிரும் இலைகளுக்கு
நதியில் மிதக்கும் எறும்பு
பிழைப்பதில் சந்தோஷம்...
இரு இதயங்களை இணைப்பதில்
இயற்கைக்கும் சந்தோஷம்..

சகலமும் இங்கே சந்தோஷமடி..
உன் சிரிப்பில் எந்தன் ஜீவன் வாழுதடி!


No comments: