உலகின் அழகிய அறிவியல்
கண்டுபிடிப்பு .....
தொலைக்காட்சி !
இன்று தொல்லை காட்சி
ஆகிபோன நிகழ்கால
பதிவுகள் இதோ ஒரு பார்வை !
சூரியன் உதிகிறதோ? இல்லையோ ?
விடிந்தவுடன் சின்ன திரையில் உதித்து
விடுகிறது அனேக வீடுகளில் ...
அதிகாலை ஆன்மீக நிகழ்ச்சி முடிந்த
அடுத்த நிமிடம் ஒரு அரைகுறை குத்து பாட்டு
போட்டுவிட்டு தான் அடுத்த நிகழ்ச்சி ஆரம்பம் ...
( ஆன்மீகத்திற்கு, ஆபாசத்திற்கும் எப்போதும் ஒரு
தொடர்ப்பு உள்ளதாகவே தோன்றுகிறது )
கல்லூரி செல்லும் வரை கை பேசியும்
கையுமாய் பெண்கள் ....
குட்டைகை சட்டையும், குறுந்தாடியுமாய்
இளைஞன் ஒருவன் திரையில்...
( முயற்சிக்கு யாருப்பா உதாரணம் கஜினி முகம்தா?
இல்ல ரஜினி முகமதா? பாவம் இவங்களே confuse ஆகிடாங்க !)
அம்மாவிடம் விட்ட சவாலில் ஒருநாள் முழுவதும் சீரியல் பார்த்து
சாதனை படைத்தேன்...ஐயோ ! இரவெல்லாம் கனவில் அந்த closeup
முகங்களில் கொலைமிரட்டல்கள்....
Remottaal சேனல் தாவிகொண்டிருப்பதை
அறியாத பாட்டி, மழை வரபோகிறது என்று
தொலைக்காட்சியை பார்த்து ஆரூடம் சொல்கிறாள்.
தேர்தல் வந்தால் ஐயோ ! கேட்கவே வேண்டாம் ....
சீரியல்கள் எல்லாம் உண்மை கதை பேச ....
செய்திகள் எப்போதும் கற்பனையாகவே காட்டபடுகிறது ....
( ஒரு வேலை சீரியல் டைரக்டர் எல்லாம் செய்தி எடுப்பாங்களோ?)
16 வயதில் தேட தொடங்கி 26 வயதில் கற்று கொண்டு இல்லற வாழ்க்கை ஆரம்பித்த எனக்கு, பக்கத்துக்கு வீட்டு பத்து வயது
சிறுவன் மீது கோபம் வருகிறது ...
( யோவ் ! அவன் discovery சேனல சிங்கம்
பார்க்கிற பார்வைய வச்சே சொல்றான்,
Uncle சிங்கம் girl friendoda romance பண்ண போகுதுன்னு)
ரசிகர்களே ! என்னக்கு கோயில் எல்லாம் வேண்டாம் ....
ஒரு படம் ஹிட் ஆன நடிகைகளின் முதல் dialouge ....
(என்ன கொடுமை சரவணன் இது )
முன்பெல்லாம் திரை நிலைத்திருக்கும்....
இடைவேளைகளில் மனிதன் நகர்வான்....
இப்போதெல்லாம் திரை நகர்கிறது ...
மனிதன் சிலை ஆகி கிடக்கிறான்.....
வாழ்வியல் கல்வி, அறிவியல், ஆன்மிகம்,
நகைச்சுவை, விவசாயம், மருத்துவம் என
கற்றுகொடுத்த அன்றைய தொலைக்காட்சிகள்
இல்லை தொலை(ந்த) காட்சிகள் இன்று என் நினைவில்
வந்து செல்கிறது....
1 comment:
ஹாஹாஹா.. ��சிந்திக்கவும் ��
Post a Comment