எதிர்பார்ப்பின் எல்லை எது?


*அங்கம் தழுவும் ஆடையெனக் கிடந்த 
எதிர்பார்ப்புக்களைத் துன்பம் தரும் பீடையெனக் 
களைந்தவன் துறவி 

(*அங்கம் - உடல் )

*பங்கம் செய்யா வண்ணம் அதை தன்னில் மட்டும் 
*புங்கமென உடுத்தியவன் அறிவி 

(*பங்கம் - துன்பம்; * புங்கம் - மெல்லிய ஆடை )

தங்கத்தால் ஆடை அணிந்தும் கூட
சங்கத்தில் பிறர் பேசும் பெருமைக்கு ஏங்குபவன்
துன்பத்தின் பிறவி

சிறு நாய்க்கு சிறுத்தை என பெயரிட்டால் மட்டும்
சினம் கொண்டு சீறுமோ? அன்றேல்
சிறு கீரை போட்டு வளர்த்தால்
தான் சிங்கம் சைவமென மாறுமோ?

பிறவி குணம் மாறாது....
பிறரிடம் நீ எதிர்பார்ப்பதும் உன்னில்
இன்பத்தை என்றும் தராது

No comments: