காதல் அலை



விழி விதைத்தாய் என்னை
மொழி பெயர்த்தாய்..
உன் வழி வகுத்தாய்.....
சிறு மழை துளியாய்
கடல் என்னை தான்
நீ கரம் பிடித்தாய் ...
பனி துளி போலவே
படர்ந்திடாய் என் உயிரிலே....
விடிந்த பின் ஏதடி
விண்மீன்கள் வானிலே......
பதிந்த பின் காதலை
பிரிப்பது நியாயமோ?
ஒளிந்த மின்னல் தேடியே.
மழை மேகம் ஏங்குமோ?
கடல் என்னை பிரிந்துசெல்லும்
அலையெனவே நீ புறப்பட்டாய்...
கரை தொட்ட பின் ஏனடி
கடலுக்கே திரும்பிவிட்டாய்...
கரை மிக தூரமா?
கலங்கரை வேணுமா?
அலையே நீ சிறையில் இல்லை
என் இதய அறையிலே...
சத்தம் உன் உறக்கம் கெடுதசொல்லடி  
சவமாய் கிடக்கிறேன்....
கடல் நீராய் மரித்தாலும் மழை நீரை  
மறுஜென்மம் எடுக்கிறேன் ....

No comments: