கனவுகள் என்றும் எந்தன் கண்ணிலே ....
கண்ணீர் துளிகள் வீழுது இம்மண்ணிலே......
தூக்கம் ஏனோ வெகு தூரத்திலே.....................
என் தூங்கா விழிகளோ ஈரத்திலே...................
அவமானம் தாங்கி வளர்ந்தது இந்த ஆலமரம்......
விழுதுகள் வீழாமல் எப்படி வலுப்பெறும்................
மண் வீழும் கண்ணீரெல்லாம் அர்த்தமாய் மாறும்......
காலம் ஒருநாள் என் கரை வந்து சேரும் .....
அன்று வெற்றி என் கைகளில் தவழும் .......
மரணம் வரும் முன் என் கனவுகள் அடைவேன் ...
முத்தும் ஒன்று தா எனதுயிரே அச்சமின்றி இறப்பேன்.....
மீண்டும் ஒரு கனவோடு உன் கருவினில் பிறப்பேன் ........
எப்போதும் உன்னோடு நிலைத்திருப்பேன்.....
No comments:
Post a Comment