முதல் பார்வையில் தோன்றவில்லை நம்
முன்ஜென்ம பந்தம்...
கண்கள் கூட சொல்லவில்லையே நம்
காதில் வந்து கொஞ்சம்...
இந்த காதல் காந்தம் ஒன்று தான்
திசைகளின்றி ஈர்க்கும்..
உயிர்கள் உறவாடும் தருணம்
தள்ளி நின்று பார்க்கும்...
கதை பேசி உன் கரம் பிடித்ததால்
கதை ஆகுமோ? என் கற்பனையின்
காவியம்...
நீயல்லவோ நான் நிலவில் பார்த்த
பெண் ஓவியம்...
நரைத்தாலும் மாறுமோ நளினமே
நம் காதலின் ஜீவிதம்...
இது என் உயிர் சொல்லும் ஆருடம்...
இலை மீது வீழும் துளி மழை போல்
வழிந்தோடி வந்தாயே என் வாழ்வில் ...
பச்சை இலையானால் விட்டிருப்பேன்...
இச்சை இலை நான்
ஆதலால் பற்றிக்கொண்டேன் ...
ஈன்றலில் தோன்றுமோர் இன்பமதை
ஆண் என்றபோதும் கொண்டேனே உன் காதலில் ...
இறப்பிற்கு முன் உள்ள வலி ஒன்றை அடைந்தேனே
உன்னோடு கொண்ட மோதலில் ...
கனவுகளை உன்னில் தந்துவிட்டேன்..
காத்திருப்பாய் எந்தன் கண்மணியே
நிஜமாகும் நாட்கள் மிக நெருக்கத்திலே......
No comments:
Post a Comment