வானில் என்ன விடுமுறையா ?
வாசல் தேடி வந்த இவள்
நம் பூமி தாயின் செல்ல மகள்...
ஆடை மேகம் களைந்திடவே
ஆசை கொள்ளும் நாகரீக மங்கை இவள்...
மின்னல் புன்னகை பூத்திடவே
நம் ஜன்னல் எட்டி பார்த்திடுவாள்....
கண்ணில் படும் யாவையுமே
கட்டியணைக்கும் கலை தெரிந்தவள்........
வான் மலர்கள் தாரைவார்திட்ட
தேன் துளியென பெய்பவள் .....
சில நொடிகள் இவளோடு வாழ்ந்தாலும்
நம்மை சிறுவனாய் மாற்றிடும் மாயவள்....
உழவனோடு உறவாடி, பள்ளி சிறுவனோடு விளையாடி
கவிஞனின் உறக்கங்களை களவாடும் பெண்ணிவள்....
காசி வேண்டாம், கங்கையும் வேண்டாம்
ஒரு துளிமழை போதும் ஊழ் வினை எல்லாம் தீரும்....
No comments:
Post a Comment