தடை தாண்டிய முரண்பாடுகள்



ஆணவளே.. பெண்ணவனே..

வெளியே வாருங்கள்

போதும் உங்களில் உறங்கிக் கிடந்த உணர்வுகள்
அடைக்கி வைத்த அன்பின் அதிர்வுகள்
முடங்கிக்  கிடந்த முரண்பாடுகள்...


கிழித்தெறிந்து வாருங்கள்

பொய்களின் முகத்திரையை

தொடங்குங்கள் அழகாய் ஓர்

சுதந்திர யாத்திரையை .



மனிதத்தின் உள்ளே மிருகமாய்

இருக்கும் சிலர் வாழ்கையில்  
ஆணின் உள்ளே தாயுமாய்

பெண்ணின் உள்ளே வீரமாய்
வாழும் உணர்வுகள் கொண்ட
நீங்கள் வாழ்வதற்கென்ன
 
குரோமோசோம் செய்த
குற்றத்திற்காகக்  குனிந்து
கிடந்தது போதும்

வந்தாகி விட்டது

உங்களுகென்று தனி
அடையாளங்கள்
உரிமைகள்...


வாழ்வின் வெளிச்சங்கள்
உங்களை நோக்கி பாயத்தொடங்கிவிட்டன
பல தலைமுறை காயங்கள்  கேலிகள்  
மெல்ல தேயத்தொடங்கிவிட்டன 

பாலியல் துறந்து பல்தொழில்

கால் பதியுங்கள்
எதிர் வரும் உலகம்
உங்கள் சாதனைகளுக்காக
காத்திருக்கட்டும்



 

No comments: