உலகம் தேடும் ஆணழகன் எவனோ?



மெய்யோடு போராடு தினம்  வலியோடு சுகம் தேடு..
இரும்போடு விளையாடு உடல்  இறுகும்வரை உறவாடு....
பனை நுங்காய் புடைத்தெழும்  புஜங்கள் அளவில் தலைமீறும்....
கானமயிலாய் விலா இரண்டும்  தோகை விரிக்கும்..
 
மார்பிரண்டும் மலையாகும்.....
திண் தோள்கள் அகன்று
திடல்போலாகும்....
இடை ஒடுங்கி ஆறு படிகளாகும்...
தொடை தசைப் பிரிந்து இரு
குடில்களாகும்...

முறுக்கேறும் நரம்புகள் உடலெங்கும் ஓடும்..
மங்கை மோகம் அடியோடு மாறும்...
மெய்ரோகம் தீரும்...
தலை தூக்கிப்  பார்வை நேராகும்..
தேகமெங்கும் கம்பீரம் சேரும்...

அரங்கம் அதிரும் தசைகள்  முறுக்கேறும் தருணம்...
இசைகேற்பத்  தசைகள் விரிந்தாடும் .. 
வெற்றி வாகை கை வந்து சேரும் ...
இத்தனை வலிமை உடையவனே....
ஊக்க மருந்திடா...
ஆக்கம் மறந்திடா ..
உலகம் தேடும் ஆணழகன்...

No comments: