மீசைக்காரா



இவ்வுலகில் நான் முதன் முதலாய்

கண்விழித்தபோது புன்னகைத்தாய்.....
 தவழ்ந்த போது துள்ளிக் குதித்தாய்......
விழுந்த போது தாவிப்  பிடித்தாய் ..
அப்பா என அழைத்தபோது அளவில்லா ஆனந்தம் கொண்டாய்
திருடிய போது தண்டித்தாய்.. 

காய்ச்சலில் படுத்தபோது கண்கலங்கினாய் ...
உன் தோள் தொட்டபோது தோழன் ஆனாய்....
காதல் என்ற போது கை கொடுத்து வாழ்த்தினாய்....
தேர்வில் தோற்ற போது தைரியம் தந்தாய்....

கல்லூரி சேர்ந்தபோது கால்கள் தேய்ந்தாய் ...
படிப்பை முடித்தபோது பாதியாகி போனாய் ...
வேலையில் சேர்ந்தபோது வயதாகி போனாயே அப்பா ...
இனி நீ என் குழந்தை ...
இவ்வுலகில் உள்ளவரை ....
மீசைக்கார அப்பா ...
நீ ரொம்ப பாசக்காரரப்பா ........உன் அறிவை கொஞ்சம் திறந்துவைத்தால் மன கிளர்சிகள் ஓடும் .....
ஞானியாக நீயும் வாழ்ந்திடடா....
பிணிகளும் இன்றி வீழ்ந்திடடா ...
வாழ்ந்தவரை வாழ்க்கை இனிக்குமடா
வீழ்ந்தபின்னும் உன் பெயர் நிலைக்குமடா ...

மனம் என்ற உணர்வுகள் தான் உன்
இன்ப துன்பத்துக்கு காரணம் ...
அறிவென்ற அனுபவம் தான் உன்
துன்பங்களை துரத்திவிடும் ...

அறியாமை துணிவிற்கு ...
அதன் விளைவுகள் தெரிவதில்லை ...
அறியாமை பயத்திர்க்கோ
அனுபவம் போதவில்லை ....

எந்த செயலின் போதும் உன்
அறிவும் சொல்வதை கேளு ...
அறிவும் மனதும் சேர்ந்தால் போதும்
வாங்கிடுவாய் அதில் நூறு நூறு ......

No comments: