மனமென்ற ஓடமும்.. அறிவென்ற துடுப்பும் ..



மனம் என்பதை மென் சிறகாய் மாற்றிடுவாய் மனிதா நீ
அறிவென்ற காற்றின் திசையில் அதை நீ செலுதிடுவாய்...
அறியாமை போக்கிவிடு அனுபவங்கள் வளர்த்துவிடு
ஐம்புலன்களை அடக்கிவிடு தானாய் அடங்கிடும் மனது ....

கூறாக இல்லாவிட்டால் கத்திக்கு வேலை இல்லை  
அது உன் புத்திக்கும் இல்லாவிட்டால் வாழ்க்கையே தொல்லை ...
கண்களை தான் திறந்து வைத்தால் காட்சிகள் வரும்
உன் அறிவை கொஞ்சம் திறந்துவைத்தால் மன கிளர்சிகள் ஓடும் .....

ஞானியாக நீயும் வாழ்ந்திடடா பிணிகளும் இன்றி வீழ்ந்திடடா ...
வாழ்ந்தவரை வாழ்க்கை இனிக்குமடா வீழ்ந்தபின்னும் உன் பெயர் நிலைக்குமடா ..
மனம் என்ற உணர்வுகள் தான் உன்  இன்ப துன்பத்துக்கு காரணம் ...
அறிவென்ற அனுபவம் தான் உன் துன்பங்களை துரத்திவிடும் ...
அறியாமை துணிவிற்கு அதன் விளைவுகள் தெரிவதில்லை ...
அறியாமை பயத்திர்க்கோ அனுபவம் போதவில்லை ....
எந்த செயலின் போதும் உன் அறிவும் சொல்வதை கேளு ...
அறிவும் மனதும் சேர்ந்தால் போதும் வாங்கிடுவாய் அதில் நூறு 

No comments: