தீண்டும் நினைவுகள்



நிஜமாய் உன் நினைவுகள் தான் 

நெஞ்சத்திலே நெருடுதடி 

நிழலாய் என்னை தொடர்ந்து 

வந்து என்னில் தஞ்சம் அடையுதடி 

தீயிட்ட உன் உறவு தான் 

உயிர் தொட்டு எரியுதே

கரை தொட்ட கிளிஞ்சலாய்

மணற்திட்டில் கதறுதே

மரணம் என்ற எல்லை கோட்டை

எனக்கு முன்னே தொட்டவள் நீ

மரித்துப்போன மனதோடு

தினம் அதை தொட முயல்கிறேன் நான்

உன்னை புதைத்த இடத்திலே சிறு

புல்லுக்கும் அனுமதியில்லை

உன்னை விதைத்த நெஞ்சிலே

நினைவுகள் மட்டும் மரமாய் ஏனடி..


No comments: