காதல் கொல்லும்


காதல் ஓயாப் போர்க்களமா 
காயம் நேரும் ஆயுதமா 
கண்ணீர்  கோரும் போராட்டமா 
கானல் நீரோட்டமா 

உயிரைத்  தீயாய் தீண்டு தம்மா 
உணர்வில் நோயாய் வாட்டு தம்மா 
உதிரும் இலையாகக் காதல் தான் 
உறவும் சருகாக ஏனோ 

கரையோடு மோதும் அலை தான் 
கடலோடு சேராமல் போய்விடுமா 
விழியோடு வீழும் இரவும் தான் 
நிறமாறிப் போவதேன் 

இதயத்தின் ஓரம் இதமாகத்  தான் 
வலியொன்றை பெற்றேனே உன்னாலே நான் 
வரமாக நீயும் வந்தாயன்பே 
வேரோடு நான் வேறாகிப்போனேனே 
சேராமல் காதல் தொல்லை கொடுக்க
நிழலாக சோகம் நெஞ்சை வதைக்க
நீங்காத நேசம் நெஞ்சை நனைக்க 
சாகாமல் நான் சவமாகிப் போனேன் 

No comments: