பந்தயம்

இறக்கை கட்டிப்  பறக்கிறதே இரு சக்கர வாகனங்கள் சாலையிலே 

இறப்புச்  செய்தி வருகிறதே தினமும் நாளிதழில் காலையிலே 

பருவம் தருகிற துணிவினிலே பந்தயங்கள் நடக்கிறதே 

பந்தபாசங்கள் நினைவில் நின்றால் பாதி வேகம் குறைந்திடுமே 

நண்பா! நீ துணிந்தவன் தான்

சாவை சட்டை போல்  அணிந்தவன் தான் 

வேகத்தில் நீ வீரன் தான் 

வெற்றி வேட்கையில் சூரன் தான் 

சாதாரண மக்கள் செல்வது நெடுஞ்சாலை 

உன் சாகசத்திற்கு இங்கு இல்லை வேலை 

உனக்கென்று ஒரு களம் உண்டு 

அதில் பறந்திடு சீறிக்கொண்டு 
வெற்றி மாலைகள் சூடிக்கொண்டு

வாழ்ந்திடு நீ சாகச வீரனென்று. ..

No comments: