என்னில் உன் விழி உலவியதோ
காதல் நெஞ்சில் பரவியதோ
இதயம் மெல்லத் திறக்கிறதோ
இதமாய் தீண்டல் நடக்கிறதோ
காதல் காற்று திசையை மாற்றுதோ
எந்தன் மனதின் சிறகும் உன்னைச் சேருதோ
ஒரு இரவில் இத்தனை மாற்றங்களா ?
உருவில் ஓர் உறவாய் உன் நிழல் போதும்
நான் உயிருடன் வாழ ..
உதிர நதியில் ஓடி
இதய அறையில் கூடி
என் உயிரும் அதிர
உணர்வில் பிறந்த
காதலடி
என்னை துளைத்து முளைத்து
என்னுள் உயிர் வாழுதடி
தனித் தீவாய் கிடந்தேன்
துணை வேண்டாம் என்று
இருந்தேன்
தடம் பதித்தாய் உறவே
தடை மறந்து ஏனோ
உன் வழி நடந்தேன்
திரைவானம் விலக்கி
தரை தேடும் மழை போல்
திரை மௌனம் விலக்கி
மெய்யால் பேசும் நேரமிது
அன்பில் திளைத்து களைத்து
கூடுவது
நரை ஏறும் பருவம்
நசையாவும் தீரும்
அசையும் அழகை
வெறுக்கும் வயதும்
இனிமையடி
நம் அகங்கள் இணைக்கும்
உயிரை பிணைக்கும்
முதுமையடி
காதல் நெஞ்சில் பரவியதோ
இதயம் மெல்லத் திறக்கிறதோ
இதமாய் தீண்டல் நடக்கிறதோ
காதல் காற்று திசையை மாற்றுதோ
எந்தன் மனதின் சிறகும் உன்னைச் சேருதோ
ஒரு இரவில் இத்தனை மாற்றங்களா ?
உருவில் ஓர் உறவாய் உன் நிழல் போதும்
நான் உயிருடன் வாழ ..
உதிர நதியில் ஓடி
இதய அறையில் கூடி
என் உயிரும் அதிர
உணர்வில் பிறந்த
காதலடி
என்னை துளைத்து முளைத்து
என்னுள் உயிர் வாழுதடி
தனித் தீவாய் கிடந்தேன்
துணை வேண்டாம் என்று
இருந்தேன்
தடம் பதித்தாய் உறவே
தடை மறந்து ஏனோ
உன் வழி நடந்தேன்
திரைவானம் விலக்கி
தரை தேடும் மழை போல்
திரை மௌனம் விலக்கி
மெய்யால் பேசும் நேரமிது
அன்பில் திளைத்து களைத்து
கூடுவது
நரை ஏறும் பருவம்
நசையாவும் தீரும்
அசையும் அழகை
வெறுக்கும் வயதும்
இனிமையடி
நம் அகங்கள் இணைக்கும்
உயிரை பிணைக்கும்
முதுமையடி
2 comments:
நரை வந்தாலும் நசைதல் தீராது சிலருக்கு... ஹ ஹ ஹா..
மிக நன்று.
Mikka nandri aiyya..
Post a Comment